கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, பூலாம்பாளையம் ஏழு கன்னிமார் சுவாமி கோவிலில், பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற கோவிலில், கன்னிமார் சுவாமிகள், மதுரை வீரன் சுவாமி, கருப்பண்ண சுவாமி மற்றும் பெருமாள் சுவாமி மூலவர்களுக்கு, வாசனை திரவியங்களால் சிறப்பு அபி?ஷகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் செய்திருந்தனர்.