பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா நடந்தது.ஆதிமூர்த்தி பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. நாலாயிர திவ்யபிரபந்த சேவையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை திருக்கொடி தீபம் நிகழ்ச்சி நடந்தது.