சங்கராபுரம்; சங்கராபுரத்தில் கொரோனா தாக்கம் முழுமையாக குறைய சன்மார்க்க வழிபாடு நடந்தது. ராமாயிஇல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். சைவ சித்தாந்தபேராசிரியர் ஜம்புலிங்கம், நெல் அரிசி ஆலை சங்கத் தலைவர் வேலு, சன்மார்க்க இளைஞரணி அமைப்பாளர் ஏழுமலைமுன்னிலை வகித்தனர். விழா அமைப்பாளர் கல்யாணி முத்துக்கருப்பன் வரவேற்றார்.வள்ளலார் மன்ற பூசகர் சிவஞானஅடிகள் முன்னிலையில் அகவல் படித்து கொரோனா தாக்கம் முழுமையாக குறைய சிறப்பு வழிபாடு நடந்தது.நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட தலைவர் ஜனனி, ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, யோகா ஆசிரியர் விஜயலட்சுமி, பழையனுார் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், கார்த்திகேயன், சந்திரசேகரன், முகமது பாரூக் பங்கேற்றனர்.