பதிவு செய்த நாள்
06
டிச
2020
12:12
மதுக்கரை; மதுக்கரை ஏ.சி.சி., காலனியிலுள்ள லட்சுமி நாராயணா கோவிலில், நேற்று முன்தினம் மண்டல மகோத்சவம், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.நேற்று காலை ஐயப்பனுக்கு பூஜை, தீபாராதனையும் தொடர்ந்து, லட்சுமி நாராயணருக்கு பூஜையும் நடந்தன. இதையடுத்து, இரவு லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர், ஐயப்பன் சன்னதிகளில் அலங்கார பூஜை, தீபாராதனைகள் நடந்தன.கஷாய கலசாபிஷேகம், நீராடுதல், சனி தோஷ நிவர்த்தி பூஜை, நட்சத்திர பூஜை, அன்னதானம், நெய் அபிஷேகம், படி பூஜை உள்ளிட்டவை நடந்தன.