ஒருநாள் முல்லாவை அரண்மனைக்கு விருந்துண்ண அழைத்தார் மன்னர். அரண்மனை சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி சுவையாக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும், ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ எனக் கேட்டார் மன்னர். ‘‘ருசியாக இருந்தது’’ என்றார் முல்லா. ‘‘மறக்க இயலாத சுவையென்று நானும் நினைத்தேன்’’ என்றார் மன்னர். உடனே முல்லா ‘‘நீங்கள் சொல்வது சரிதான் மன்னா! தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ‘‘ருசியாக இருக்கிறது என்று மட்டும் தானே சொன்னீர்கள்? இப்போது திகட்டாத ருசி என்கிறீர்களே’’ என்றார் மன்னர். ‘‘உண்மை தான் மன்னா! நான் உங்களுக்கு அடிமையே தவிர.... இந்த முட்டைக்கோஸுக்கு அடிமை இல்லையே’’ என சிரித்தார் முல்லா.