முல்லாவும் அவரது மனைவியும் இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டருகில் ஏதோ சத்தம் கேட்டது. என்ன சத்தம் என பார்ப்பதற்காக வேட்டைத் துப்பாக்கியுடன் வீட்டுக்கு வெளியே வந்தார் முல்லா. தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ ஒன்று அசைவது போலிருந்தது. குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டு விட்டு துாங்கி விட்டார். காலையில் எழுந்து எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக தோட்டத்திற்கு விரைந்தார். குறிப்பிட்ட இடத்தில் மரத்தில் துவைத்து காயப் போட்டிருந்த சட்டை சல்லடையாகி கிடந்தது. ‘‘ இப்படி நல்ல சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என மனைவி கத்தினாள். ‘‘இல்லை. நானே அதிர்ஷ்டசாலி. இந்த சட்டையை அணிந்திருந்தால் நான் உறுதியாக கொல்லப்பட்டிருப்பேன். நல்ல வேளையாக தப்பித்து விட்டேன்’’ என்றார் முல்லா.