காளையார்கோவில்: காளையார்கோவில் சோமேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக விழா கடந்த மே 25 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்த்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு 7 மணிக்கு சொர்ண காளீஸ்வரர் கோபுரம் முன்பு சவுந்தரநாயகி அம்மன் தபசு காட்சியளித்தார். தொடர்ந்து 8 மணிக்கு தெப்பக்குளம் மண்டபத்தில் அம்மன் கதிர்குளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 7 மணியிலிருந்து 8மணிக்குள் திருக்கல்யாணமும்,மே30 ம் தேதி சமணர்கள் கழுவேற்றம், மே 31 ம் தேதி காலையில் பொய்பிள்ளை மெய்ப்பிள்ளை நிகழ்ச்சி, ஜூன் 1ம் தேதி நடராஜர் தரிசனம்,ஜூன் 2ம் தேதி தேரோட்டம்,ஜூன் 3ம் தேதி தீர்த்த தெப்பத்துடன் விழா நிறைவு பெறுகிறது.