பதிவு செய்த நாள்
29
மே
2012
11:05
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 10ம் ஆண்டு ஸ்ரீ மகா சண்டி ஹோமம் நேற்றுமுன்தினம் வெகுவிமர்சையாக நடந்தது.முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி அருள்பாலித்து வரு ம் முள்ளாச்சி மாரியம்மன் கோ விலில் இந்த லோகத்தை அø னத்துவிதமான தீய தியிடமிருந்து காத்து, ரட்சித்து மூன்று வகை திகளான இச்சா, கிரியா, ஞான திகளின் ஒரே அம்சமாக முள்ளியாற்றில் சுயமாக தானே தோன்றி முள்ளைநாயகியாக அ ம்மன் அருள்பாலித்து வருகிறார்.இதனால் சப்த சதி என்னும் 700 சுலோகங்களை கொண்ட அம்ப விசும்பன் முதற்கொண்டு மகிஷாசுரன் வரையுள்ள அசுரர்களை, தன்வசப்படுத்தும் மகா சண்டி ஹோமம் நேற்று முன்தினம் காலையில், ஸ்ரீதேவி, அனுக்ஞை ஸ்ரீ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் வைஸ்ணவ பூஜை, சோடக கணபதி பூஜை, ஸ்ரீ சப்தசதி பாராயணம் ஆகியவற்றுடன் தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலையில் சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை ஆகியவை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மஹா சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது. தீபாராதனைக்கு பின்னர் புனித நீர்க்குடங்கள், ஊர்வலமாக எடு த்து செல்லப்பட்டு முள்ளாட்சி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் சண்முகசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. கோவில் சிவாச்சாரியார் குமாரமூர்த்தி, சோமாஸ்கந்தன் ஆகியோர் பங்கேற்று பூஜைகளை செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் நீதிமணி, தக்கார் மதியழகன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.