பதிவு செய்த நாள்
08
டிச
2020
03:12
திருவொற்றியூர் : திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுவாமி தரிசனம் செய்தார். சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. பழமையான கோவில் என்பதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவங்கி, பல முக்கிய பிரமுகர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னை வந்துள்ள தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று மதியம், தன் கணவருடன், வடிவுடையம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.