உடுமலை:உடுமலை பூர்வீக பள்ளி வாசலில், கந்துாரி விழா நடந்தது.உடுமலை பூர்வீக பள்ளிவாசல் மற்றும் அரபி மதரஸா நிர்வாகத்தின் சார்பில், உலக அமைதிக்காகவும், கொரோனா நோய் பாதிப்பு நீங்கி இன்ப வாழ்வு கிடைக்க வேண்டி, கந்துாரி விழா எனும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ஏராளமானவர்கள் பங்கேற்று, சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற அன்னதானம் நடந்தது.பூர்வீக பள்ளிவாசல் தலைவர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானத்தை, தலைமை இமாம் சையத் ஈசா பைஜி துவக்கி வைத்தார். செயலாளர் தாஹிர் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.