சேத்தூர்: சேத்தூர் மேட்டுப்பட்டி சந்தான பாலகிருஷ்ணசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.காலையில் யாகசாலை பூஜை ,அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.