பதிவு செய்த நாள்
13
டிச
2020
03:12
கலசப்பாக்கம்: மார்கழி மாத பிறப்பில், பர்வத மலையில் கிரிவலம் செல்ல, தடை விதித்து, கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில், 4,560 அடி உயர மலை உச்சியில், பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது, இங்கு பவுர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது, கொரோனா ஊரடங்கால், பவுர்ணமி நாட்களில், மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்கழி மாத பிறப்பு நாளில், அதிகளவு பக்தர்கள் இந்த மலையை சுற்றி, 24 கி.மீ., தூரம் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, வரும், 16ல் கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறவும் தடை விதித்து, கோவில் செயல்அலுவலர் பரமேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.