ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2020 11:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் கோலாகலமாக துவங்கியது.
உற்சவத்தின் முதல் நாளான இன்று ( 15 ம் தேதி) நம்பெருமாள் நீள்முடி கிரீடம், கஸ்தூரி திலகம், ரத்தின அபயஹஸ்தம், மணிக்கடிகை, அடுக்கு பதக்கம், முத்து மணி மாலை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.