Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : மார்கழி பலன் விருச்சிகம் :மார்கழி பலன் விருச்சிகம் :மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலாம் : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
துலாம் : மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12


சித்திரை 3, 4ம் பாதம் :     ராசிநாதன் சுக்ரனின் அமர்வு நிலையும் நட்சத்திர அதிபதி செவ்வாயின் ஆட்சி பலமும் உங்களை உற்சாகத்தோடு செயல்பட வைக்கும். சுறுசுறுப்பு நிறைந்த செயல்கள் உங்கள் வெற்றிக்கான காரணியாக அமைகிறது. எடுத்த காரியங்களை எவ்வாறேனும் செய்து முடித்துவிடுவீர்கள். ஏற்கெனவே திட்டமிட்டபடி காரியங்கள் நடக்காமல் போனால் நேரத்திற்கு ஏற்றவாறு திட்டத்தினை மாற்றிக்கொண்டு அதில் வெற்றி காண்பீர்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற அதிகம் போராட வேண்டி வரும். பொருள் வரவு நன்றாக இருந்து வந்தாலும் அதையும் மீறி அதிகம் செலவு செய்வீர்கள். பகட்டான ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளைக்குப் பின்னர் உறவினர் ஒருவரை சந்தித்து பழங்கதைகளை பேசி மகிழ்வீர்கள். தைரியஸ்தானம் வலுப்பெற்று காணப்படுவதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு வரும் நீங்கள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் வெளிப்படும் கடுமையைக் கட்டுப்படுத்துவது நல்லது. வீட்டினில் சுபநிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் வேகமாக தேர்வெழுதும் கலையில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளால் கூடுதல் செலவு உண்டாவதோடு அவர்களின் செயல்கள் மன வருத்தத்தினைத் தரும் வகையில் அமையும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு கொள்வீர்கள். அவரது அதிரடியான செயல்கள் உங்களுக்கு மன வருத்தத்தினைத் தரும். செலவுகளைக் கட்டுப்படுத்த மனம் நினைத்தாலும் நடைமுறையில் சாத்தியமாகாது. பணியில் மேலதிகாரிகளிடம் நற்பெயரை அடைவீர்கள். எல்லாம் இருந்தும் ஏதோ ஒருவித உணர்வால் இரவில் உறக்கம் வராது தவிப்பீர்கள். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதில் வந்து போகும். கலைஞர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.


பரிகாரம் : லலிதாம்பிகையை வழிபட்டு வாருங்கள்.

சந்திராஷ்டமம் : டிச. 26, 27

ஸ்வாதி :  ராசிநாதன் சுக்ரன் 2ல் கேதுவின் இணைவினைப் பெறுவதும் நட்சத்திர அதிபதி ராகு எட்டில் நீசம் பெறுவதும் உங்கள் மனநிலையில் மாறுபட்ட சிந்தனைகளைத் தந்துகொண்டிருக்கும். கடந்த சில நாட்களாக சதா டென்ஷனாக இருந்து வருகிறீர்கள். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பதால் விரக்திக்கு ஆளாகி உள்ளீர்கள். இந்த மாதத்தில் நிலவும் கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் மனக்கலக்கத்தைப் போக்கி சுறுசுறுப்புடன் பணியாற்றச் செய்யும். வேகமாகச் செயல்படும் அதே நேரத்தில் நிதானத்தை இழக்கக்கூடாது. அவசரம் ஆபத்தைத் தரலாம். எரிபொருட்களைக் கையாளும்போது அதிக எச்சரிக்கை தேவை. குறிப்பாக பெண்கள் சமையல் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களோடு வீண் மனஸ்தாபம் தோன்றக்கூடும். சங்கடமான சூழலில் வீண் விவாதத்தைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உடன்பிறந்தாரோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை. டிச. மாத இறுதியில் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். உங்கள் எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதில் இருக்கும் பாரம் குறைவதாக உணர்வீர்கள். அதே நேரத்தில் குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வேலைக்குச் செல்வோர் அலுவல் கோப்புகளைக் கையாளும்போது சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் மறதியைத் தவிர்க்க கடுமையான பயிற்சி தேவை. நிதானத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது.

பரிகாரம் : அரசமரத்தடி நாகரை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 27

விசாகம் 1, 2, 3ம் பாதம் :  இந்த மாதத்தில் தடைபட்டு வந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கக் காண்பீர்கள். உங்கள் ராசியின் மீது நேரடி பார்வையை செலுத்தும் செவ்வாய் அதீதமான தைரியத்தை மனதினில் குடிபுகச் செய்வார். மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களை அநாயாசமாக செய்து முடிப்பீர்கள். உங்களது பேச்சும் செயலும் சதா உங்களின் தொழிலைப் பற்றியே இருக்கும். பல புதிய நண்பர்களின் சந்திப்பால் தொழில் ரீதியான முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். செயற்கையான விளம்பரங்கள் இன்றி மனிதர்களின் மூலமாகவும், நீங்கள் செய்து வரும் பணிகள் மூலமாகவும் உங்களின் பெயர் பரவும். அடிக்கடி பயணங்கள் செல்ல வேண்டி நேரிடும். தாயார் வழி உறவினர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். புதிய வீடு கட்டி வரும் அன்பர்கள் சாதகமான நிலையினை உணர்வார்கள். வங்கி சார்ந்த கடனுதவி எளிதாகக் கிடைக்கும். பிள்ளைகளின் மேல் கொண்டிருக்கும் அளவு கடந்த பாசம் அவர்கள் செய்யும் தவறினையும் மறைக்கச் சொல்லும். அதிதீவிர சிந்தனையும், வீணான கற்பனைகளும் உடல்நிலையை பாதிக்கலாம். கவனம் தேவை. மாணவர்கள் ஆசிரியர்களின் துணையோடு கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பர். தொழில் ரீதியாக வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்திருக்க நேரலாம். செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முற்பட்டு அதில் ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். தகப்பனாரின் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவல் ரீதியாக கடுமையான அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ஒரு சிலர் டெபுடேஷன், தற்காலிக பணி இடமாற்றம் ஆகியவற்றை சந்திப்பர். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கு பயனுள்ளவையாக அமையு-ம். தன ஸ்தானத்தில் சுக்ரன் வாசம் செய்வதால் நல்ல தன லாபத்தினை அடைவீர்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : சங்கர நாராயணரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் : டிச. 28

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar