Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : மார்கழி பலன் துலாம் : மார்கழி பலன் துலாம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னி : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
கன்னி : மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12

உத்திரம் 2, 3 4ம் பாதம் :  ராசிநாதன் புதன் மற்றும் நட்சத்திர அதிபதி சூரியன் ஆகியோரின் இணைவு நன்மையைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நான்காம் இடம் ஆகிய சுக ஸ்தானம் வலுப்பெறுவதால் வாழ்வியல் நிலை உயர்வடையும். குரு பகவானின் ஐந்தாம் இடத்து அமர்வு நிலை உங்களை மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்ற வைக்கும். பொறுப்புகளைச் சுமப்பதில் முழு ஆர்வம் கொள்வீர்கள். இதனால் கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொண்டிருப்பதால் பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வீர்கள். உறவினர் ஒருவர் நீங்கள் எப்போதோ செய்த உதவியை நினைவில் கொண்டு தற்போது நன்றிக்கடன் செலுத்துவார். அடுத்த வீட்டுக்காரர்களுக்கு உதவப்போய் அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள். உறவினர்களின் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். பிள்ளைகளின் விவேகம் நிறைந்த செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது. மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்துவதில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உரிய நேரத்தில் பயன்தரும். வயிற்றுவலி சார்ந்த உபாதைகளால் அவதியுற நேரலாம். பணிக்குச் செல்வோர் சுறுசுறுப்பான பணிகளின் மூலம் தனிமதிப்பைப் பெறுவர். சுயதொழில் செய்வோருக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  மாணவர்கள் பாடங்களில் முழு ஈடுபாடு கொள்வர். இரவினில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடலாம். தன்னம்பிக்கை உயரும் மாதம் இது.


பரிகாரம் : அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வரவும்.
சந்திராஷ்டமம் : டிச. 24

ஹஸ்தம் :  இந்த மாத கிரக நிலை சாதகமாக இருப்பதால் பொருளாதார ரீதியாக நல்லதொரு நிலையினைக் கண்டு வருவீர்கள். ஆயினும் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெறும் செவ்வாயால் செலவுகளும் தொடர்ந்து இருந்து வரும். பொருள் விரயமாகாமல் தடுக்க சேமிப்பில் ஈடுபட்டாலும் ஓரளவிற்கே வெற்றி காண முடியும். அல்லல்பட்டு வருவோர்க்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தைகள் தெம்பூட்டும். ருசியான உணவு வகைகளை மிகவும் விரும்பி உண்பீர்கள். அடுத்தவர்களின் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். உடன்பிறந்தோருக்காக நீங்கள் அலைய வேண்டி வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த நன்மையைத் தரும். தாயார் வழி உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயமும் உண்டு. மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் வழியில் சுப செலவுகளை சந்திக்க நேரிடும். அவர்களது வாழ்வினில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். உடல்நிலையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது நல்லது. வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய நலனுக்காக மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவார். முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும். வியாபாரிகளுக்கு தொழில் நல்ல நிலைமையில் இருக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஊதிய உயர்வினைக் காணும் நேரம் இது. கலைத்துறையினர் தொழில் முறையில் நினைத்த காரியங்களை எளிதாக சாதித்து எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். சிறப்பான பலன்களைத் தரும் மாதம் இது.


பரிகாரம் : மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 24, 25

சித்திரை 1, 2ம் பாதம் :   ராசிநாதன் புதன் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். வாக்கு ஸ்தானத்தின் மீது நட்சத்திர அதிபதி செவ்வாயின் பார்வை விழுவதால் களத்தில் இறங்கி செய்ய வேண்டிய காரியங்களை வாய் வார்த்தைகளைக் கொண்டு செய்து முடிப்பீர்கள். அதிகாரம் நிறைந்த பேச்சு உங்கள் பலமாக உள்ளது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து பேசுங்கள். சரியான நேரத்திற்கு விரும்பிய உணவு வகைகளை உட்கொள்ள இயலாது போகும். உடன்பிறந்த சகோதரிகளால் நன்மை உண்டாகும். மாற்று மதத்தினர், மாற்று மொழி பேசும் அழகான பெண்கள் ஆகியோரிடத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கவும். திட்டம் போட்டு செய்து வரும் செயல்களில் தொடர்ந்து வெற்றி காண்பீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். பிள்ளைகளின் ஏறுக்கு மாறான செயல்கள் உங்களுக்கு மன வருத்தத்தினைத் தந்தாலும் அவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சிந்தனைகளில் அநாவசியமான பயமும், கற்பனையும் கொடி கட்டி பறக்கும். ஆயினும் எண்ணத்தில் இருக்கும் குழப்பத்தினை வெளிக்காட்டாது செயல்பட்டு வருவீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். ஒருசிலர் பல்வலி போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகலாம்.  வீண் விரயத்தினைத் தடுக்க வாழ்க்கைத்துணையின் பெயரில் சேமிப்பில் ஈடுபடலாம். பிதுரார்ஜித சொத்துக்களில் பாகப்பிரிவினை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஆதாயம் அடைவார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்களால் நன்மை அடைவீர்கள். மாணவர்கள் குழப்பத்தினைத் தவிர்க்க ஆசிரியரின் உதவியைப் பெறுவது நல்லது. சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.


பரிகாரம் : ராதாகிருஷ்ணர் வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் : டிச. 25, 26

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar