ஸ்ரீவில்லிபுத்துார்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் திருமஞ்சனம் சதுரகிரியில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்க பட் டு,ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்களுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.