தாயார் அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2020 10:12
மந்தாரக்குப்பம்; குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சிறப்பு தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இச்சேவை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடப்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.