திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஞானானந்தகிரி சுவாமிகளின் 47ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு சுந்தர் பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது.
காலக் கணக்கிற்கு அடங்காத நீண்ட நெடு வாழ்வு வாழ்ந்த மகான் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள். இவரது அதிஷ்டானம் அமைந்துள்ள திருக்கோவிலூர், தபோவனத்தில் சுவாமிகளின் 47 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 16ம் தேதி காலை 5:00 மணிக்கு மூர்த்திகள் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினசரி மாலை 3:00 மணிக்கு பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உபன்யாசம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஓ.எஸ். சுந்தர் பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 29ம் தேதி மாலை 5:00 மணிக்கு மணிமண்டபம் சற்குருநாதர் சன்னதியில் மகா அபிஷேகம், ஸ்ரீ வித்யா ஹோமம் நடக்கிறது. 30ம் தேதி காலை 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜர் அபிஷேகம், ஊடல் உற்சவம், அதிஷ்டானத்தில் 108 கலசாபிஷேகம், சகஸ்ர சங்காபிஷேகம். இரவு 8:00 மணிக்கு கார்த்திக் ஞானேஸ்வரின் நாமசங்கீர்த்தனம். 31ம் தேதி காலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், 10:15 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீ அமர்நாத் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.