பதிவு செய்த நாள்
21
டிச
2020
07:12
தோகை விரித்தாடும் மயில்... பூத்து குலுங்கும் மலர்கள்... சேலையில் விளக்கேற்றும் பெண்...இப்படி ’தினமலர்’ வாசகியர் தத்ரூபமாக கோலமிட்டு, பிரமிக்க வைத்து விட்டனர்.வீட்டு முற்றம் மட்டும் பார்த்த பெண்களின் கோலத்திறமைகளுக்கு, ஊர் அறிய மகுடம் சூட்டும் தினமலரின் மார்கழி கோலத்திருவிழா போட்டி காட்சிகள்தான் இவை!போத்தீஸ் மற்றும் யு டிவி, சைக்கிள் அகர்பத்தி, கண்ணன்ஸ் காபி, தனுஷ் மார்க் சம்பா ரவை நிறுவனம், ஜீவி மரச்செக்கு எண்ணெய் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கோலப்போட்டி நடத்தப்பட்டது.நேற்று, ஐந்து அபார்ட்மென்டுகளில் நடந்த போட்டியில், வாசகியர் வித, விதமான கோலங்களை இட்டு, நடுவர்களை அசத்தியிருந்தனர். அதிலும், கிரியேட்டிவ் கலர் மிக்சிங்கில் தீட்டப்பட்ட வித்தியாசமான வண்ண கலவைகள் வேற லெவல்!
இதில் ஹைலைட்டே, கோலம் போடும் பெண்களுக்கு, தந்தை, கணவர், சகோதரர்கள், குழந்தைகள் ஓடி, ஓடி உதவி செய்ததுதான்!கோலத்தில் விழிப்புணர்வு!பி.என்.புதுார், ரைட் ஹவுஸ் வெல்பேர் அசோசியேஷன் அபார்ட்மென்டில் நடந்த போட்டியில், சான்ட்ரீனா, லாவண்யா, சந்தியா, பாரதி, அருள்மொழி, திவ்யா, அங்கயற்கண்ணி, பத்மாவதி ஆகியோர் வென்றனர். கொரோனா விழிப்புணர்வு வாசகங்களுடன் கோலமிட்டிருந்த, லோகநாயகி, ஜெயஸ்ரீ, சரஸ்வதி ஸ்லோகன் பிரிவில் பரிசுகளை பெற்றனர். நிகழ்வில், ரைட் ஹவுஸ் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் ரமேஷ்குமார், துணை தலைவர் ரேவதி, இணை செயலாளர் மல்லிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.நாங்களும் கலக்குவோம்ல!’அதென்ன...பெரியவங்களுக்கு மட்டும்...நாங்களும் கலக்குறோம் பாருங்க’ என, வடவள்ளி, சவுபர்னிகா ஸ்கந்தகிரி அபார்ட்மென்டில், பெரியவர்களுக்கு போட்டியாக குழந்தைகளும் தனி அணியாக புகுந்து விளையாடினர். சும்மா சொல்லக்கூடாது... அத்தனையும் அம்சம்!
இவர்களில் பூர்ணலட்சுமி, மேகவர்தினி, அவந்திகா, தக் ஷா, தேஜஸ்வினி ஆன்ட்ரியா, லயா ஆகியோர் பரிசு தட்டிச் சென்றனர். பெரியவர்கள் பிரிவில், விமலா, கோகிலா, தேன்மொழி, சிவகாமி, சுதா லட்சுமி ஆகியோர் வென்றனர்.ராமநாதபுரம் பார்சன் நெஸ்டில், திவ்யா, முருகலட்சுமி, ஜானகி, கோமதி, உமா ஆகியோரும், சிங்காநல்லுார், பி.ஜி.பி., வில்லேஜ் அபார்ட்மென்டை சேர்ந்த, ஆண்டாள், கவிதா, சசிரேகா, உஷா ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், கண்ணன்ஸ் காபி, சைக்கிள் அகர்பத்தி, ஜீவி மரச்செக்கு எண்ணெய், தனுஷ் மார்க் இட்லி பொடி பாக்கெட் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.நீங்களும் பங்கேற்கலாம்!உங்கள் அபார்ட்மென்டிலும் கோலப்போட்டி நடத்த, இப்போதே முன்பதிவு செய்யுங்கள். போட்டிகள், வரும் 25, 26, 27 மற்றும் ஜன., 1, 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில், காலை, 8:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடைபெறும். உங்கள், குடியிருப்போர் நலச்சங்க ’லெட்டர் பேடில்’ , கலந்து கொள்பவரின் பெயர், பிளாட் எண், மொபைல் எண் மற்றும் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் தேதி, நேரம் குறிப்பிட்டு, 87540 33032 என்ற எண்ணுக்கு, அனுப்பி பதிவு செய்யலாம்.