அதனையொட்டி, கடந்த 17ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு நடந்தது. தொடர்ந்து 18ம் தேதி காலை கோ பூஜை, பால கணபதி பூஜை, காப்பு அணிதல், கரி கோலம் வருதலும், மாலை 6:00 மணிக்கு யாக பூஜை துவங்கியது. மறுநாள் 2 மற்றும் மூன்றாம் யாக பூஜை நடந்தது.முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜை, தொடர்ந்து திருக்குடங்கள் புறப்பட்டு காலை 9:30 மணிக்கு சிவகாமியம்மை உடனாகிய ஆனந்த நடராஜப் பெருமானுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதில், தொகுதி எம்.எல்.ஏ., செல்வம், ஊர் முக்கிய பிரமுகர் சேகர் மற்றும் சிவனடியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சுவாமி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருக்கனூர் வித்யா மந்திர் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.