பதிவு செய்த நாள்
24
டிச
2020
08:12
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, சுற்று வட்டார பகுதி பெண்கள், சிறுமியர், நேற்று முதல் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட தொடங்கியுள்ளனர். மூலவரை வெளியில் நின்று தரிசிக்கும் வகையில், வரிசை அமைக்கப்பட்டது. காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை மட்டுமே கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்ற அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இம்முறை அக்னி சட்டி, அலகு குத்துதல், கேளிக்கை நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்தும், கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓம்காளியம்மன் கோவிலில்...: ஈரோடு, கருங்கால்பாளையம் காவிரி சாலையில் உள்ள, ஓம் காளியம்மன் கோவில் பொங்கல் விழா பூச்சாட்டு, கொரோனா கட்டுபாட்டால், நேற்று முன்தினம் இரவு, எளிமையாக நடந்தது. ஜன.,4ல் சிறப்பு அபிஷேகம், 5ல் கரகம் எடுத்தல், 6ல் அதிகாலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. கங்கணம் கட்ட, ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வர அனுமதியில்லை. பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில், கோவில் பரம்பரை அறங்காவலர் மட்டும் கலந்து கொண்டனர்.