பதிவு செய்த நாள்
24
டிச
2020
08:12
திருப்பூர்:திருநள்ளாறில் நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவுக்காக, ஏலக்காய் மாலை மற்றும் கிரீடம் அவிநாசியில் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், வரும், 27ம் தேதி அதிகாலை, சனிப்பெயர்ச்சி விழா நடக்க உள்ளது.
விழாவை முன்னிட்டு, ஏலக்காய், எள் மற்றும் ருத்ராட்சத்தில் தயாரிக்கப்பட்ட மாலை, ஆரம், கிரீடம் ஆகியவை, அவிநாசியில் தயாரிக்கப்பட்டு, திருநள்ளாறு அனுப்பப்படுகிறது. மாலை தயாரித்த பூ வியாபாரி பாபு கூறுகையில், கடந்த முறை நடந்த சனிப்பெயர்ச்சி விழாக்களின்போது, இதேபோல், விசேஷமான மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறையும் ஐந்து பேர் அடங்கிய குழுவினரால், மூன்று நாட்களாக, சிறப்பு வாய்ந்த மாலை, கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. சனி பகவானுக்கு மாலையும், உற்சவருக்கு, மாலை, ஆரம் மற்றும் கிரீடம் ஆகியன ஏலக்காய் பயன்படுத்தி தயாரித்தோம். இன்றிரவு (நேற்று) சிவாச்சார்யார் மூலமாக, திருநள்ளாறுக்கு அனுப்பி வைத்தோம், என்றார்.