உளுந்தூர்பேட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2020 04:12
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதிகளில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. இதில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இருந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாடு துவங்கியது. உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது.
இதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா வெள்ளையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், எலவனாசூர்கோட்டை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத பிரசன்ன ஸ்ரீ சர நாராயண பெருமாள் கோவில், உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அலர்மேல் மங்கை நாயகா சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.