சனி பெயர்ச்சி விழாவில் கொரோனா சான்று கட்டாயமில்லை: ஐகோர்ட்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2020 02:12
சென்னை:திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: சனிபெயர்ச்சி விழா நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஐகோர்ட் தெரிவித்து இருப்பதாவது: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை . அதே நேரத்தில் விழாவில் கலந்து கொள்ள வருவோருக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட வேண்டும். என தெரிவிக்கப்ட்டது.