திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் நவ. 9 முதல் கோயில் மண்டபங்களில் தங்க அனுமதி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2026 04:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 9 இரவு முதல் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்க அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் நாட்களில் திருப்பரங்குன்றம், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நவ. 10ல் துவங்குகிறது. விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் நவ. 9 இரவு முதல் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்ளலாம். பாதுகாப்பு கருதி தீபாவளி தினத்தன்று (அக். 8) இரவு கோயிலில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.