வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2020 10:12
மயிலாடுதுறை: மார்கழி மாத கார்த்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தருமபுர ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில் புகழ்பெற்ற முருகன் ஸ்தலமாகும் இங்கு முருகன் செல்வமுத்துக்குமாரசாமி யாக தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான இந்த கோயில் விளங்குகிறது இன்று மார்கழி மாத கார்த்திகை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளினார் அங்கு அவருக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது தருமபுர ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.