பதிவு செய்த நாள்
30
டிச
2020
03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வசந்த மண்டபத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஷோடசோபவுபச்சார தீபாராதனை, சுவாமி கோவில் வளாகத்தில் புறப்பாடு, ஊடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.