பதிவு செய்த நாள்
30
டிச
2020
05:12
பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சாலை முத்து விநாயகர் கோவிலில், ஐயப்ப சுவாமி உற்சவ மூர்த்திக்கு, அபிஷேக, ஆராதனை நடந்தது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுவாமி ஐயப்பன் சுவாமி சிலை, பென்னாகரம் டவுன் பகுதியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பூஜைகள் நடப்பது வழக்கம். இதையொட்டி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சாலை விநாயகர் கோவிலில், ஐயப்ப சுவாமி உற்சவ மூர்த்திக்கு, நேற்று அபிஷேக ஆராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அகில பாரத ஐயப்ப சேவா சங்க, தர்மபுரி மாவட்ட செயலாளர் அங்குராஜ் செய்திருந்தார். நிகழ்ச்சியில், கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், பென்னாகரம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் நிர்வாகிகள் பால சரவணன், ஐயப்பன், சபரிராஜ், ஏரியூர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.