மலர்ந்தது 2021 புத்தாண்டு: நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2021 04:01
புதுடில்லி: 2021-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
2021 ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி வந்த நிலையி்ல் இன்று முதன்முறையாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2021 புத்தாண்டு பிறந்தது அந்நாட்டுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் 2021 -புத்தாண்டு பிறந்தது. நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுடன் புத்தாண்டு துவங்கியது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பல்வேறு இடங்களில் வான வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி சர்ச்களில் சிறப்பு பிராத்தனை நடந்தது; கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.