ஆஸி., நியூசிலாந்து நாடுகளில் பிறந்தது 2021 புத்தாண்டு: மக்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2021 04:01
வெலிங்டன்: நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2021 புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 2021 ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
நியூசிலாந்து: இந்நிலையில் 2021 -புத்தாண்டு முதன்முறையாக நியூசிலாந்தில் பிறந்தது. இந்திய நேரப்படி இன்று மாலை நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் ஆகிய நகரங்களில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கையுடன், கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆஸ்திரேலியா: இதே போன்று ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது.சிட்னி துறைமுகம் அருகே கண்ணை கவரும் வான வேடிக்கை , இசை நிகழ்ச்சிகளுடன் சிட்னிவாசிகள் ஒன்று கூடி 2021-ம் ஆண்டு புத்தாண்டை ஆடிப்பாடி வரவேற்றனர்.