நகரி: நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை கிராமத்தில் சரவண விநாயகர் கோவிலில் நாளை, 1ம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இக்கோவிலில் சரவண விநாயகர் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டன. சரவண விநாயகர் கோவில் அமைந்துள்ள, ராஜவீதி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.