பதிவு செய்த நாள்
31
மே
2012
11:05
செஞ்சி : செ.புதூர் தர்மசாஸ்தா ஐயப்பசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலமாக கோபுரங்கள் மீது மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளனர். விழுப்புரம் தாலுகா செ.புதூர் கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள தர்மசாஸ்தா ஐயப்பசுவாமி கோவில், ஓம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (1ம்தேதி) நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கோபூஜை, கஜபூஜை மற்றும் மகா தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், 1008 லலிதா சகஸ்ரநாம யாகவேள்வி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், புஷ்பாஞ்சலி, மந்திர புஷ்பங்கள், மகா பூர்ணாஹுதியும் நடக்க உள்ளது. இரவு 9 மணிக்கு பரவை முனியம்மாவின் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. நாளை (1ம்தேதி) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலமாக கோபுரங்கள் மீது மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளனர். விழா ஏற்பாடுகளை ஐயப்பன் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகி மோகன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.