அன்னுார்: மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன் புதுார், பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதுாரில் பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இறைவன் வடக்கு நோக்கி வீற்றிருப்பது விசஷேமானதாகும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கினால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். இறைவன் சன்னதியில் அரிசியை வைத்து வழிபட்டு, அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவர்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சிறப்பு வேள்வி நடந்தது. இதையடுத்து பைரவருக்கு, பால், தேன், நெய், வில்வம் உள்ளிட்ட ஒன்பது வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 9:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது.இறைவனின் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட அரிசியை பக்தர்களுக்கு வழங்கினர். இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகி யோகேஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.