பதிவு செய்த நாள்
08
ஜன
2021
03:01
சென்னை:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களுக்கும், பொங்கல் கருணைத் தொகையாக, 1,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறநிலையத் துறை கமிஷனர் பிரபாகரின் அறிவிப்பு:அரசு பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதுபோல, அனைத்து கோவில்களில் பணிபுரியும் முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதி யம், தினக்கூலி பணியாளர்களுக்கு, 2019- - 20ம் ஆண்டிற்கான கருணைத் தொகை வழங்க, அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி, ஆண்டில், 240 நாட்கள்; அதற்கு மேலும் பணிபுரிந்தோருக்கு, 1,000 ரூபாய் வழங்கப் படுகிறது.ஆறு மாதத்திற்கு மேல், 240 நாட்களுக்குள் பணிபுரிந்தவர்களுக்கு, பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும், விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்க, அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.