பதிவு செய்த நாள்
08
ஜன
2021
03:01
திண்டுக்கல்: வைகை நதியே தென்பாகமே அமைத்து வளம் கொழிக்கும் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மாநகர் மேட்டுப்பட்டியில் அமைந்த அஞ்சலி வரத ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். இவருக்கு 12.1.2021 முதல் 13.1.2021 ஆகிய இரண்டு தினங்களில் ஹனுமத் ஜெயந்தி வைபவம் மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
12.1.2021 மார்கழி 28 காலை 8 மணிமுதல் பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுத் சகஸ்ர நாம ஹோமம், 10-00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி.
காலை 10.30 மணியளவில் மிக பிரம்மாண்டமான அபிஷேகம் 1000 லிட்டர் பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகமும் அதை தொடர்ந்து ஏழுவகையான வர்னாபிஷேகமும் நவ கலச கும்ப அபிஷேகமும் நடைபெறும், அன்று தங்க கவசத்தில் ராஜ அலங்காரம்.
இரவு - 7.00 மணியளவில் இதுவரை எந்த ஸ்தலத்திலும் செய்யப்படாத அதி அற்புதமான புஷ்பாஞ்சலி வைபவம் நடைபெறும். 7 வகையான உதிரி புஷ்பங்களால் அபிஷேகம் (புஷ்பாஞ்சலிக்கு துளசி, செவ்வந்தி, மல்லிகை, பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, ரோஜா ஆகியவற்றை பக்தர்கள் முடிந்த அளவு சமர்ப்பிக்கலாம்.) அதன் பின் பிரசாத விநியோகம்.
மறுநாள் 13-1-2021 1008 ஜிலேபி மாலையுடன் வஜ்ர அங்கி கவச சேவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது.\
தொடர்புக்கு: வி.ஆர். சுந்தர்ராஜ பட்டாச்சாரியார், மேட்டுப்பட்டி, சேவா சங்கத் தெரு,
சின்னாளப்பட்டி- 624 301.செல்: 94432 26861