பதிவு செய்த நாள்
09
ஜன
2021
07:01
புதுச்சேரி : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு, வரும் 12ம் தேதி, 2,500 லிட்டர் பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் 12ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் நேற்று மாலை துவங்கியது. 11ம் தேதி வரை தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் ேஹாமம், பூஜைகள், லட்சார்ச்சனை நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை 8:30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு 2,500 லிட்டர் பால், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. ராமர் பாதுகைக்கும் திருமஞ்சனம் நடக்கிறது. அபிேஷகத்தை தொடர்ந்து, ஆஞ்ஜநேயருக்கு விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணியளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 4:00 மணியளவில் சீதா திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.