பதிவு செய்த நாள்
11
ஜன
2021
03:01
ஈரோடு: ஈரோடு, வ.உ.சி., பூங்கா, மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டு கொரோனா பரவலால், விழா நடத்துவது தொடர்பாக, ஈரோடு ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வரும், 12ல் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். முக்கிய நிகழ்வுகளில், 50 முதல், 100 பேருக்கு மட்டும் அனுமதி. அன்னதானம், திருவீதியுலா, தேர் இழுத்தல், வியாபார கடை அமைத்தல், பொழுது போக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், விழா நடத்த அனுமதி கிடைத்தது. இதையடுத்து அனுமன் ஜெயந்தி தினமான வரும், 12ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மஹா கணபதிக்கு அபிஷேகம், 4:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், 5:00 மணிக்கு மலர் அலங்காரம், மதியம், 1:30 மணிக்கு வடைமாலை சாற்றுதல், மாலை, 5:00 மணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடப்பதாக, கோவில் செயல் அலுவலர் கீதா தெரிவித்தார்.