திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வன்மீகநாதர், நம்புதாளை நம்புஈஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான சிறப்பு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.* ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சிவநாமம் உச்சரித்து வழிபாடு செய்தனர்.