புதுச்சேரி; முருங்கப்பாக்கத்தில் ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம் நடந்தது.முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில் ஆண்டாள் திருக் கல்யாண கூடாரவல்லி உற்சவம் நேற்றுமுன்தினம் புன்னை மர வாகனத்தில் சுவாமி வீதியுலாவுடன் துவங்கியது. நேற்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.காலை 7 மணிக்கு கண்ணன், ஆண்டாள் நாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு கலச திரு மஞ்சனம், காலை 9 மணிக்கு சந்துவெளி மாரியம்மன் கோவிலில் இருந்து பள்ளத் தெரு வழியாக பெண் அழைப்பும் நடந்தது. மாலை திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, தாயார் கோதை நாச்சியாருடன் வீதியுலா வந்தார்.