‘‘உங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக நீங்கள் கண்ணீர் சிந்தினால் அது உங்களுடைய பலவீனம். ஆனால் மற்றவர்கள் மீது அன்பு கூர்ந்து கண்ணீர் விட்டால் அது உங்களுடைய பலம். ஆண்டவர் மீதுள்ள அன்பை அளக்க மற்றவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பே அளவுகோல்’’ என்கிறார் அறிஞர் பில்லி கிரஹாம். உயிர்களின் மீதுள்ள அன்புக்காக தன்னுயிரை தியாகம் செய்தார் இயேசு. அவரைப் போல பிறருக்காக உயிரையும் கொடுக்க நாம் தயாராக வேண்டும். அதுவே உண்மையான பலம்.