அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டனும், பீட்டர் மில்லரும் பள்ளிக்கூட நண்பர்கள். ஜனாதிபதி ஆன பிறகும் நட்பு தொடர்ந்தது. மில்லர் சபை ஒன்றில் போதகராக இருந்தார். தேச விரோத கும்பலின் தலைவனான மைக்கேல் வதந்திகளைக் கிளப்பி போதகரை அவமானப்படுத்தினான். ஆனாலும் பொறுமையுடன் இருந்தார் மில்லர். ஒருமுறை போலீசாரிடம் சிக்கிய மைக்கேலுக்கு மரண தண்டனை கிடைத்தது. இதனை கேள்விப்பட்ட மில்லர், ஜனாதிபதியை சந்தித்து மைக்கேலுக்கு மன்னிப்பு தர வேண்டினார். ‘‘ தேசத்துரோகிக்கு உதவ முடியாது’’ என ஜனாதிபதி மறுத்தார். ஆனாலும் மில்லர் மன்றாடினார். அதன் பின்னரே மில்லருக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும், அதை பொருட்படுத்தாமல் அவனுக்காக வாதாடியது பற்றியும் ஜனாதிபதிக்கு தெரிய வந்தது. போதகரின் நல்ல மனதிற்காக மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார் ஜனாதிபதி. இதைக் கேள்விப்பட்ட மைக்கலே் மன்னிப்பு கடிதம் ஒன்றை மில்லருக்கு அனுப்பினான். ‛‛ மனதில் அன்பு இருந்தால் சத்துருவிடம் சமாதானமாகும்படி ஆண்டவர் செய்வார்’’