பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
பழநி - பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசம், தொடர் விடுமுறையால் பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர் மழையால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
யாக பூஜை: பழநி முருகன் கோயிலில் தை மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது.அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் யாக பூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.