பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 - ல் தர்மசாஸ்தா கோவில் உள்ளது. கடந்த கார்த்திகை, 1 -ல் மண்டல பூஜைக்காக. கோவில் மேல் சாந்தி சசி நம்பூதிரி, தலைவர் ராஜேஷ் மற்றும் ஒரு பக்தர் ஆகியோர், தேங்காய் உடைத்து, நடை திறந்தனர். தொடர்ந்து தினமும், பக்தர்கள் மாலை போடுதல், அபிஷேக வழிபாடு உள்ளிட்டவை நடந்தன.
கும்பாபிஷேகம், தசாவதார அலங்காரம் உள்ளிட்டவையும் நடந்தன. குறிப்பாக தொற்று பாதிப்பால், சபரிமலை செல்ல இயலாத நிலையில், பல பகுதிகளை சேர்ந்த மாலை அணிந்த பக்தர்கள், இங்கு நெய் அபிஷேகம் செய்து, வழிபட்டு சென்றனர். நேற்று முன்தினம் மகரஜோதி, கும்பாபிஷேகம் முடிந்து, 41வது நாள் முன்னிட்டு, கலசாபிஷேகம், சுதர்சனம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மாலையில் சுடர் விளக்கு வைக்கப்பட்டது. மாலை, 6:45 மணிக்கு மகரஜோதி ஏற்றப்பட்டு, வானவேடிக்கை மற்றும் தாயம் பகை வாத்தியத்துடன், திரளானோர் ஐயப்பனை தரிசித்தனர். மண்டல பூஜை நிறைவுக்கு அடையாளமாக, தலைவர், மேல்சாந்தி ஆகியோர் பக்தர் ஒருவருடன் கோவிலை வலம் வந்து. தேங்காய் உடைத்தனர். பின் நடை அடைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ராஜேஷ், செயலாளர் மணிகண்டன். ரவி, ராமன், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.