பொங்கலூர்: அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில் அலகு மலையில் பூப் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பூ பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி நடந்தது. இதில், தேசிய பறவை, ஜல்லிக்கட்டு காளை, தேசியக் கொடி மற்றும் மரங்களை காப்பது, பாரம்பரியத்தை போற்றுவது, பெண்களை காப்பது, உறுப்பு தானம் அறுவடை உள்ளிட்டவை குறித்த கோலங்கள் வரையப் பட்டிருந்தன. கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.