பதிவு செய்த நாள்
17
ஜன
2021
10:01
பாப்பிரெட்டிப்பட்டி: எச்.புதுப்பட்டியில், தீப்பாஞ்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பச்சை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியில், தீப்பாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டுக்கான திருவிழா, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு, பீணியாற்றங்கரையில், பச்சை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.