பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
10:06
திருநெல்வேலி: நெல்லை டவுன் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் இன்று (1ம் தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. நெல்லை டவுன் அம்மன் சன்னதி உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் கடந்த 30ம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், உற்சவ விக்ரக ஐடிபந்தனம், திருமுறை பாராயணம், ராகமாலிகை ஆசிர்வாதம் நடந்தது. மாலையில் ஆச்சார்ய விஷேச சந்தி, மூன்றாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யாஹூதி, வஸ்த்ராஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இரவு ரத்ன நியாசாதிகள், யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. கும்பாபிஷேக விழாவான இன்று காலை 4 மணிக்கு மங்கள இசை, பிம்ப சுக்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம், நாடி சந்தானம், நயனோன் மீலனம், நாமகரணம், வஸோர்த்தாரா ஹோமம், வஸ்த்ராஹூதி, மகா பூர்ணாஹூதி, திருமுறை பாராயணம், ராகமாலிகை, ஆசிர்வாதம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 6.33 மணிக்கு மேல் 6.53 மணிக்குள் விமான கோபுரம், உற்சவர் அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை கண்ணன் குருக்கள், அர்ச்சகர் சங்கரலிங்க குருக்கள், சுப்பிரமணிய சிவம் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர்.