பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
10:06
போடி: போடி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ராஜவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால் வாழ்க்கையில் மன அமைதி இல்லாதவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் தந்து ராஜவிநாயகர் அருள்பாலிப்பதாக ஐதீகம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புதிய விக்ரஹங்கள் நகர் வலம், யாகசாலை பிரவேஷம், பெண்கள் தீர்த்த தொட்டியிலிருந்து தீர்த்தம் கொண்டு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை விசேஷ பூஜைகளுடன் காலை 8.35 மணியளவில் ராஜவிநாயகர் கோயில் கும்ப கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், அன்னதானம் வழங்கப்பட்டன. மாலையில் மகா அபிஷேகம் நடந்தது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பணிக்கமிட்டி தலைவர் ஜெகஜோதி, செயலாளர் எஸ்.கே.முருகேசன், பொருளாளர் எஸ்.டி. முருகேசன், சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் முருகேசன், பொருளாளர் மாடசாமி, சேனைத்தலைவர் மகாஜன மத்திய சங்க தலைவர் நல்லசிவம், சேனைத்தலைவர் மாதர் சங்க தலைவர் சன்னாசியம்மாள், செயலாளர் மனோரஞ்சிதம், பொருளாளர் சந்திரா, வாலிபர் சங்க தலைவர் காமாட்சி, செயலாளர் பவுன்தாஸ், பொருளாளர் கணேசன் உள்பட நிர்வாகஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் பழனிராஜ், பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலைராஜபாண்டியர், வர்த்தகர்கள் சங்க கௌரவ ஆலோசகர் பாலசுப்பிரமணியம், காளிகாம்பாள் திருமண மண்டப உரிமையாளர் உலகநாதன், ஸ்ரீ மாரி ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஹரிஹரன், போடி வர்த்தகர்கள் சங்க செயலாளர் தனசேகரன், சரவணா ஏஜன்சி உரிமையாளர் அங்குவேல், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஜே.ஜே., ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் ரஞ்சித், அய்யப்பன் பிளாஸ்டிக்ஸ் உரிமையாளர் அன்பரசன், புதுவை மாநில கூட்டுறவு வங்கி மேலாளர் குணசேகரன், கவிதா நகை அடகுகடை உரிமையாளர் சந்தோஷ், ஏலக்காய் எஸ்டேட் அதிபர் சங்கரபாண்டியன், கவிதா பேங்கர்ஸ் செயலாளர் கணேசன், வக்கீல்கள் ராஜபிரபு, கார்த்திகேயன், ராம் புரோட்டா ஸ்டால் உரிமையாளர்கள் , குணா மோட்டார்ஸ் உரிமையாளர் குணசேகர், சித்ரா ஆப்டிகல்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன், சேனைத்தலைவர் பால்வழங்கும் சங்க நிர்வாஸ்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை சோமஸ் கந்த குருக்கள் செய்திருந்தார்.