Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிவனை வழிபடும் காளை பணம் சேர வரகூர் வாங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மத்தாய் ஜூவாலாமுகி
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
23:12

மைசூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது சாமுண்டீஸ்வரியம்மன் கோயில் தான். அவளின் தங்கை ஜுவாலாமுகிக்கும் கோயிலும் இருக்கு. உங்களுக்கு தெரியுமா... கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் கோயில் உள்ளது.
 ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர். இதனைப் பயன்படுத்தி தேவர்களைத் துன்புறுத்தினான் அசுரன். ரிஷிகள் நடத்திய யாகங்களைத் தடுத்தான். அனைவரும் உலகத்தின் தாயான பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டிய படி, கோரைப் பற்களுடன் ‘ஜுவாலாமுகி’ என்ற திருநாமத்தோடு பார்வதி புறப்பட்டாள். அசுரனுடன் போரிட்டு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். அநீதியை அழித்து தர்மத்தைக் காக்கும் தாயாக இங்கு இருக்கிறாள்.   
சாமுண்டி மலையை அடுத்த குன்றில் சுயம்புவாக புற்றில் இருந்து வெளிப்பட்ட நிலையில் அம்மன் காட்சியளிக்கிறாள். மிகச் சிறிய வாசலுடன் குகை போல சன்னதி உள்ளது. நாக்கை நீட்டிய படியே கோபத்தோடு காட்சி தரும் அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளன. உற்ஸவ அம்மனின் முகம் சாந்தநிலையில் உள்ளது. .  தங்கையான ஜுவாலாமுகியை தரிசித்த பின்னரே சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும். பவுர்ணமியன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்து எலுமிச்சை தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும்.
ஜுவாலாமுகி சன்னதியை ஒட்டி சிவபெருமானின் சன்னதி உள்ளது. அசுர வதம் செய்த பாவம் நீங்க, அம்பிகை இங்கு சிவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள். சித்தத்தை (அறிவு) தெளிவாக்குபவர் என்பதால் ‘சித்தேஸ்வரர்’ என்றும், ராமர் வழிபட்ட சிவன் என்பதால் ராமநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைவரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது
மைசூருவில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உத்தனஹள்ளி
விசேஷ நாட்கள்:ஆடிபவுர்ணமி, நவராத்திரி, மகாசிவராத்திரி, சனிபிரதோஷம்
நேரம்: காலை 7:30 மணி- மதியம் 2:00 மணி, மாலை 3.00 - இரவு 9.00 மணி.
தொடர்புக்கு: 089645 - 71235
அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்(12 கி.மீ.,)
நேரம்: காலை 7:30 மணி- மதியம் 2:00 மணி, மாலை 3.30 - இரவு 9.00 மணி.
தொடர்புக்கு: 0821 – 259 0027

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர்.  ... மேலும்
 
கோயில் வழிபாட்டில் முதல் வணக்கம் விநாயகருக்குத் தான். அவர் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபாட்டை ... மேலும்
 
சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ஆடம்பர ... மேலும்
 
பாண்டியநாட்டின் தலைநகராக மதுரை இருந்த காலத்தில் நகரைச் சுற்றி எட்டுத்திசைகளிலும் புராணப் பெயர்கள் ... மேலும்
 
பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11 கோயில்கள் ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.