பதிவு செய்த நாள்
19
ஜன
2021
01:01
நாமக்கல்: தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடந்தது. நாமக்கல்லில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். தை முதல் ஞாயிறை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம்; 11:00 மணிக்கு பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், தேன், பால், தயிர், வெண்ணெய், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம்; மதியம், 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.