பழமை வாய்ந்த இக்கோவில் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி முடிவடைந்ததையொட்டி, கடந்த 8ம் தேதி முகூர்த்தகால் நடுதல், காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. கடந்த 17ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை, புண்யாகவசனம், பஞ்சகவ்யம், பஞ்சாசனம், கணபதி ேஹாமம் நடந்தது.மாலை 4 மணிக்கு யாகசால பிரவேசம், மண்டப ஆராதனை, முதற்காலயாக பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, 7 மணிக்கு கோ பூஜை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் திருபணிக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.